பாடகராக அறிமுகமாகும் நடிகர் அஜித்!
In சினிமா March 13, 2018 7:21 am GMT 0 Comments 1581 by : Velauthapillai Kapilan

அஜித்தின் ‘விசுவாசம்’ திரைப்படத்தின் வேலைகள் வேகமாக இடம்பெற்றுவரும் நிலையில் இத்திரைப்படத்தில் அஜித் பாடல் ஒன்றை பாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த விசுவாசம் திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான், அஜித் சம்மதித்தால் கண்டிப்பாக பாட வைக்கத் தயார் என கூறியுள்ளார்.
இதில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கின்றார். நகைச்சுவை நடிகர்களாக யோகிபாபு, ரோபோ ஷங்கர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் தம்பி ராமையாவும் நடிக்கின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.