விஜயகலாவிற்கு எதிராக வழக்கு தாக்கல்: சட்டமா அதிபர் ஆலோசனை!
In இலங்கை September 7, 2018 2:44 pm GMT 0 Comments 1821 by : Ravivarman

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) மாலை சட்டமா அதிபரினால் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் விடுதலைப்புலிகள் தொடர்பாக விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்துத் தொடர்பாக பல சர்ச்சைகள் தோன்றிய நிலையில் அவர் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
இந்நிலையில், விஜயகலா மகேஸ்வரன் மீது இவ்விடயம் தொடர்பாக பல்வேறு நிலைகளில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் இன்று சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்யுமாறு அறிவுரை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.