விஜய் மகன் சஞ்சய் நடித்த குறும்படம் ஒன்றின் டீசர்!
In சினிமா September 25, 2018 12:23 pm GMT 0 Comments 1558 by : ஜெயச்சந்திரன் விதுஷன்

விஜய்யின் மகன் சஞ்சய் விரைவில் நடிகராக களம் இறங்குவார் என்று தகவல் வெளியானது. அதை உண்மையாக்கும் வகையில் சஞ்சய் நடித்த குறும்படம் ஒன்றின் டீசர் வெளியாகி உள்ளது.
விஜய் தான் நடித்த வேட்டைக்காரன் படத்தில் தனது மகன் சஞ்சய்யை ஒரு பாடலுக்கு நடனமாட வைத்தார். திரையுலகில் மகனைக் களமிறக்கும் முயற்சி என்று அப்போது அது பேசப்பட்டாலும் தொடர்ந்து அவர் படங்களில் நடிக்கவில்லை.
தனது நண்பர்களுடன் இணைந்து தற்போது சஞ்சய் குறும்படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்தக் குறும்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.
‘ஜங்ஷன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த குறும்படம் வீடியோ கேம் விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது போல் தெரிகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.