விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள விநோத தகவல்

இரவு நேரங்களில் ஒளிரக்கூடிய எலும்புகளைக் கொண்ட தவளை இனம் ஒன்றினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இத்தவளைகள் நச்சுத்தன்மை உடையவை என கண்டறியப்பட்டுள்ளது.
பிரேஸிலில் உள்ள அட்லான்டிக் வனப் பகுதியிலேயே இவ் வினோத இனத் தவளைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மனிதக் கண்ணிற்கு மாத்திரமே இவ்ஒளிர்வு தெரியும் என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் சாதாரண வேளைகளில் இவ் ஒளிர்வினை பார்வையிட முடியாது எனவும், கழி ஊதாக் கதிர்களைகளை பரப்புவதன் ஊடாகவே கண்காணிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இத் தவளைகளின் காதில் நடு எலும்பு காணப்படாமையினால் ஒரு தவளை எழுப்பும் ஒலியை மற்றைய தவளைகளால் கேட்பது கடினம் என குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.