விடுதலைப்புலிகளை குற்றவாளியாக சித்திரிக்க OMP அலுவலகம் முயற்சி – ஐங்கரநேசன்
In இலங்கை April 18, 2019 5:19 am GMT 0 Comments 2527 by : Dhackshala
காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு குறும்படமானது, விடுதலைப் புலிகளை குற்றவாளியாகக் காண்பித்துள்ளதாக வட. மாகாணத்தின் முன்னாள் அமைச்சர் ஐங்கரநேசன் தெரிவித்தார்.
யாழில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர், “விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த குறும்படம் எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும் அது விடுதலைப்புலிகளை விமர்சிக்கும் வகையிலேயே அமைந்துள்ளது. விடுதலைப்புலிகள் என்ற வார்த்தைகள் அந்த குறும்படத்தில் இடம்பெற்றிருக்காவிட்டாலும்கூட, விடுதலைப்புலிகளே காணாமலாக்கப்பட்டவர்களுக்கு பொறுப்பு எனும் வகையில் காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
காணாமல்போனோர் அலுவலகம் மக்கள் மனதில் விடுதலைப்புலிகளை தவறாக சித்திரிக்கும் நோக்கில் செயற்படுகின்றது.
அரசாங்கத்தின் படைகளையும் நீதிகோரி போராடும் ஒரு அமைப்பையும் ஒரே தராசில் வைத்துப்பார்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.