வித்தியாவுக்கு கொடூரம் இடம்பெற்ற மண்ணில் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்
In இப்படியும் நடக்கிறது April 24, 2019 1:56 am GMT 0 Comments 9565 by : Litharsan

புங்குடுதீவுப் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்றமை குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை, மாலை 19 வயதான கர்ப்பிணியான இளம் குடும்பப் பெண் அருகில் உள்ள காட்டுக்குள் விறகு எடுக்கச் சென்றுள்ளார்.
இந்நிலையில் அங்கு கள்ளச்சாரயம் காய்ச்சி வரும் 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் அந்த பெண்ணை வலுக்கட்டாயப்படுத்தி மது பருக்கி, அவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்த முயற்சித்துள்ளார்.
எனினும், அங்கிருந்து தப்பிய அப்பெண் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய சந்தேகநபரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
ஊர்காவற்துறைப் பொலிஸார் இது தொடர்பான முறைப்பாட்டினை ஏற்று சந்தேகநபரை தேடிவருகின்றனர். இதேவேளை, பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதிகளவான பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டு நாட்டில் எங்கும் இராணுவத்தினர் குடிகொண்டிருக்கும் நிலையிலும் பெண்கள் தனியே வெளியே செல்ல முடியாத நிலையில் இருக்கின்றார்கள். இது குறித்து பொலிஸாரும் பாதுகாப்பு அதிகாரிகளும் கவனஞ்செலுத்தி பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.