விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு – தமிழர் கைது!

கனடாவில் இடம்பெற்ற விபத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடாவின் Eglinton Avenue மற்றும் Hurontario Street பகுதியில், Sorrento Drive மற்றும் Elia Avenue வீதிச் சந்திப்பில் கடந்த 1ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்திருந்தார்.
அத்துடன், விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதி தப்பிச்சென்றிருந்த நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
37 வயதான செயந்தன் சிவகுமாரன் என்ற தமிழர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.