விமான நிலையங்கள் திறக்கப்படும் திகதி குறித்த அறிவிப்பு வெளியானது
In இலங்கை January 4, 2021 4:46 am GMT 0 Comments 2170 by : Dhackshala
வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட அனைத்து வணிக விமானங்களுக்காக ஜனவரி 22ஆம் திகதி தொடக்கம் விமான நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரதம் தொடர்பாக அவதானம் செலுத்தி சுகாதார பிரிவுகளின் விசேட கண்காணிப்பின் கீழ் விமான நிலையங்களைத் திறக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், ஜனவரி 22ஆம் திகதியின் பின்னர் நாட்டிற்கு வருவதற்கு அனைத்து வர்த்தக விமானங்களுக்கும் சந்தர்ப்பம் வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், பாதுகாப்பு முறைமைகளைக் கடைப்பிடித்து நாட்டை திறக்க வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.