விம்பிள்டன் பகுதியில் வாயு வெடிப்பு: இருவர் காயம்!
In இங்கிலாந்து October 20, 2018 11:05 am GMT 0 Comments 1307 by : krishan

தென்மேற்கு லண்டனில் விம்பிள்டன் பகுதியிலுள்ள வீடொன்றின் முன்பாக இடம்பெற்ற வாயு வெடிப்பு சம்பவத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
விம்பிள்டன் ஹைன்ட் வோக் பகுதியில் உள்ள இரண்டு மாடிகளைக் கொண்ட வீட்டின் முன்பகுதி மற்றும் கூரைப் பகுதி என்பன இந்த வெடிப்பினால் பலத்த சேதமடைந்துள்ளதாக லண்டன் தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
இன்று (சனிக்கிழமை) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் இடம்பெற்ற தருணத்தில் வீட்டினுள் யாரும் இருக்கவில்லை என்றும், வீதியால் சென்ற பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்
இதன்போது பிறிதொருவரும் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். திடீர் வாயு வெடிப்பு தொடர்பில் காரணத்தை வௌியிடாத அதிகாரிகள் இச்சம்பவம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதென குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் தொடர்ந்து அதிகாரிகள் ஆராய்ந்து வருவதுடன், அயலவர்களான 18 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.