விலகினார் நடால்; அமெரிக்க இறுதிப்போட்டிக்கு டெல் போட்ரோ முன்னேற்றம்
In டெனிஸ் September 8, 2018 5:29 am GMT 0 Comments 1639 by : Arun Arokianathan
அமெரிக்க பகிரங்க டென்னிஸ் அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் காயம் காரணமாக விலகியதால் ஆர்ஜெண்டினாவின் ஜுவான் மார்டின் டெல் போட்ரோ இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயினைச் சேர்ந்த உலகின் முதல் நிலை வீரர் ரபேல் நடால் ஆர்ஜெண்டினாவில் டெல்போட்ரோவை எதிர்கொண்டார்.
போட்டியில் 2 செட்கள் முடிவில் டெல் போட்ரோ 7-6 (3), 6-2 என முன்னிலை பெற்ற நிலையில், நடால் தன் வலதுகால் மூட்டில் ஏற்பட்ட காயத்தில் வலி அதிகமானதால் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதனால், டெல் போட்ரோ இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். இதற்கு முன்பாக இரண்டு முறை அரையிறுதியில் மோதியுள்ள இவர்கள் தலா ஒரு முறை வெற்றியை பெற்றிருக்கின்றனர். 2009ஆம் ஆண்டில் நடாலை வீழ்த்தி டெல் போட்ரோ இறுதிக்கு முன்னேறியதுடன் பட்டத்தையும் கைப்பற்றினார். கடந்த ஆண்டு டெல் போட்ரோவை அரையிறுதியில் சந்தித்த நடால் அவரை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறினார். பின், பட்டத்தையும் வசப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.