விலங்கினங்களால் அழிவடையும் நெற்செய்கையால் விவசாயிகள் பாதிப்பு
In இலங்கை September 8, 2018 10:27 am GMT 0 Comments 1502 by : Yuganthini
பொலன்னறுவை பகுதியிலுள்ள பயிர்ச்செய்கைகளை இனந்தெரியாத விலங்கினங்கள் நாசம் செய்வதாகவும் இதனால் பாரிய நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் விவசாயிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
குறித்த செயற்பாட்டால் 100க்கு 90 வீத பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பராக்கிரம, கிரித்தலைய மற்றும் மின்னேரியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளே அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் மேலும் கூறுகையில், “இவ்விடயம் தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் பாதிக்கப்பட்ட எமக்கு நட்டயீடு வழங்குவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.