விளம்பரங்கள் துஷ்பிரயோகங்களைத் தூண்டுகின்றன : உள்துறை அமைச்சர்
In இங்கிலாந்து November 6, 2018 11:22 am GMT 0 Comments 1493 by : shiyani

இணையத்தில் இடம்பெறும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு விளம்பரங்களும் காரணமாக அமைகின்றன என உள்துறை அமைச்சர் சாஜித் ஜாவிட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்குபவர்களால் இணையங்களில் ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அரசாங்கத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக நிபுணர் பகுப்பாய்வுக்கு உள்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
சட்டபூர்வமான தயாரிப்புகளுக்கான விளம்பரங்கள் மற்றும் பிரபலமான பொருட்களின் விளம்பரங்கள்கூட சிறுவர் துஷ்பிரயோகத்தை தூண்டும் இணையதளங்களில் காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இப்பிரச்சினையை ஆழமாக ஆராய்வதற்காக இணைய கண்காணிப்பு அமைப்பை அரசாங்கம் நியமித்துள்ளது.
குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருப்பது உள்துறை அமைச்சரான தனது முக்கிய பணிகளில் ஒன்று எனவும் தொழில்நுட்ப நிறுவனங்கள் இப்பொறுப்பை தீவிரமாக எடுத்துக்கொள்ளவேண்டுமெனவும் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இணையங்களில் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு விளம்பரங்கள் எவ்வாறு காரணமாகின்றன என்பது குறித்து விரிவான விசாரணை ஒன்றை முன்னெடுப்பதற்கு உள்துறை அமைச்சர் ஆணையிட்டுள்ளார்.
அத்துடன் சிறுவர் துஷ்பிரயோகங்கள் குறித்த பிரச்சினையைக் கையாள்வதற்கு மேலதிக நிதியை ஒதுக்குவதற்கும் அவர் உறுதியளித்துள்ளார்.
அமெரிக்காவில் தொழில்நுட்ப நிறுவங்களின் தலைமை நிர்வாகிகளை சந்திக்கவுள்ள உள்துறை அமைச்சர் அவர்களிடம் சிறுவர் துஷ்பிரயோகங்களை இணையத்தில் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து கடுமையாக வலியுறுத்துவார் என நம்பப்படுகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.