விளையாடிக்கொண்டிருந்த இரு சிறுவர்கள் கிணற்றில் வீழ்ந்து உயிரிழப்பு
மடு – காக்கையன் குளம் பகுதியில் இரு சிறுவர்கள், பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவத்தில் முஹமட் சம்ரான் (வயது-5) மற்றும் முஹமட் அஸ்ஹான் (வயது-7) ஆகிய சகோதரர்களான இருவருமே நேற்று (வியாழக்கிழமை) மாலை இவ்வாறு உயிரிழந்தனர்.
குறித்த சிறுவர்கள் இருவரும், அவர்களது வீட்டின் பின் பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த நிலையில் நீண்ட நேரமாக காணாமல் போயுள்ளனர்.
இதன் போது அவர்களைத் தேடிய பெற்றோர், பாதுகாப்பற்ற கிணற்றினுள் சடலமாக காணப்பட்டமையை அறிந்தனர்.
உடனடியாக மடு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த மடு பொலிஸார் குறித்த இரு சடலங்களையும் மீட்டு, மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் சென்ற மாவட்ட பதில் நீதவான் இ.கயஸ் பெல்டானோ பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த சடலங்களை பார்வையிட்டார்.
மேலும், அவர் மரண விசாரணைகளை மேற்கொண்டதுடன், பிரேத பரிசோதனையின் பின் இரு சடலங்களையும் பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.