விளை பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் – பிரதமர் மோடி
In இந்தியா December 19, 2020 3:20 am GMT 0 Comments 1506 by : Jeyachandran Vithushan

வேளாண் விளை பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநில விவசாயிகளுடன் காணொலி வழியாக நேற்று வெள்ளிக்கிழமை உரையாற்றிய பிரதமர் மோடி, வேளாண் சட்ட விவகாரத்தில் விவசாயிகளை எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துகின்றன என்று குற்றம்சாட்டினார்.
வேளாண் சட்டங்களில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்பது வேளாண் துறை நிபுணா்கள், அரசியல் கட்சிகள், விவசாயிகளின் நீண்டகால கோரிக்கை என்றும் அவா் தெரிவித்தார்.
அத்தோடு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக இருக்கிறது என்றும் பிரதமர் கூறினார்.
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லி எல்லையில் பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேச மாநில விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டம் 23 ஆவது நாளாக நேற்றும் நீடித்தது.
அவா்களுடன் மத்திய அரசு இதுவரை நடத்திய பலகட்ட பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதனிடையே, விவசாயிகளுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படும் வரை வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை மத்திய அரசு நிறுத்தி வைக்கலாம் என்று உச்சநீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.