விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தி.மு.க.ஆர்ப்பாட்டம்
In இந்தியா December 5, 2020 8:14 am GMT 0 Comments 1462 by : Yuganthini

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க.வினரும் தமிழகத்தின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயிகளின் வாழ்வுரிமைப் போராட்டத்திற்கு உரிய மதிப்பளித்து, மூன்று வேளாண் சட்டங்களையும் உடனடியாக மத்திய பா.ஜ.க.அரசு திரும்பப் பெற வேண்டுமென குறித்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மேலும், விவசாயிகளின் ஜீவாதார உரிமைகளைப் போற்றவும், இந்திய வேளாண்மைத்துறை வீழ்ந்து விடாமல் காப்பாற்றவும், டெல்லியில் தொடர்ந்து தொய்வின்றி நடைபெற்று வரும் விவசாயிகளின் மகத்தான போராட்டத்திற்கு உணர்வு பூர்வமான ஆதரவை தெரிவிப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பா.ஜ.க.வினர் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், கருப்புக் கொடி ஏந்தி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் நடைபெற்ற கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் தயாநிதி மாறன்,சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.