விவசாயிகளுடன் மத்திய அரசு புதிதாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் – பா.சிதம்பரம்
In இந்தியா January 21, 2021 4:27 am GMT 0 Comments 1326 by : Krushnamoorthy Dushanthini

கடந்த கால பேச்சுவார்த்தைகளில் நடந்ததை ஒதுக்கி வைத்துவிட்டு மத்திய அரசு விவசாயிகளுடன் புதிதாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என முன்னாள் நிதி அமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ருவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், “கடந்த கால பேச்சுவார்த்தைகளில் நடந்ததை ஒதுக்கி வைத்துவிட்டு மத்திய அரசு புதிதாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
சிலேட்டில் புதிதாக எழுதுவதுபோல் தொடங்க வேண்டும். முன்னோக்கி செல்வதற்கு இதுதான் வழி. என்ன செய்ய வேண்டும், எதை தவிர்க்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
கடந்த காலத்தை ஒதுக்கி வைக்க மறுக்கும் அரசிடம் ஆக்கப்பூர்வமான முடிவை எப்படி எதிர்பார்க்க முடியும்?” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.