விவசாயிகள் – மத்திய அரசுக்கு இடையிலான 10ஆவது கட்ட பேச்சுவார்த்தை
In இந்தியா January 20, 2021 10:27 am GMT 0 Comments 1360 by : Dhackshala

3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்கங்களின் தலைவர்கள் மற்றும் மத்திய அரசிற்கு இடையிலான 10ஆவது கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகிறது.
டெல்லி விக்யான் பவனில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில், மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர், வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
ஏற்கனவே நடைபெற்ற 9 சுற்றுப் பேச்சுவார்த்தையிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
வேளாண் சட்டங்களில் தேவையான திருத்தங்களை செய்யத் தயாராக இருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட போதிலும் 3 சட்டங்களையும் நீக்கியே ஆக வேண்டும் என்று விவசாய சங்கங்கள் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமையால், இழுபறி நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.