விஷால் படத்தில் இணையும் கார்த்தி!
In சினிமா October 16, 2018 3:52 am GMT 0 Comments 1751 by : Sujitharan

சண்டக்கோழி 2 படத்தில் விஷால்லுடன் நடிகர் கார்த்தியும் இணைந்து பணியாற்றி இருக்கிறார்.
விஷால் நடிப்பில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் சண்டக்கோழி 2. இதனுடைய முதல் பாகத்தை இயக்கிய லிங்குசாமியே இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார்.
இம்மாதம் 18ஆம் திகதி இந்தபடம் வெளியாகவுள்ள நிலையில் இதகுறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் திரைப்படத்தில் நடிகர் கார்த்தியும் இணைந்து பணியாற்றியுள்ளார். இயக்குனர் லிங்குசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில், ”சண்டக்கோழி 2 படத்தில் வாய்ஸ் ஓவர் கொடுத்ததற்காகவும், இப்படக்குழுவில் இணைந்தமைக்காகவும் கார்த்திக்கு எனது சிறப்பு நன்றிகள்” எனக் கூறியுள்ளார்.
இந்தப் பதிவால் கார்த்தி ரசிகர்களும் தற்போது மகிழ்ச்சில் உள்ளனர். நடிகர் கார்த்தி வெறும் வாய்ஸ் ஓவர் மட்டும்தான் கொடுத்திருக்கனின்றாரா? அல்லது படத்திலும் நடித்திருக்கின்றாரா? எனும் விபரம் இனிமேல்தான் தெரியவரும்.
லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி பையா திரைப்படத்தில் ஏற்கெனவே நடித்திருக்கிறார். விஷாலும் கார்த்தியும் இணைந்து பிரபுதேவா இயக்கத்தில் வெள்ளை ராஜா கறுப்பு ராஜா என்ற படத்தில் நடிக்க இருந்து அந்த திரைப்படம் கைவிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மீண்டும் இருவரும் இணையும் வாய்ப்பு இந்த திரைப்படத்தின் மூலம் கிடைத்திருக்கின்றமையால் ரசிகர்கள் இப்போது மகிழ்ச்சியில் உள்ளார்கள்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.