வீட்டில் கொள்ளையர்கள் புகுந்ததால் உரிமையாளர் யன்னல் வழியாக பாய்ந்து உயிரிழப்பு!
In இங்கிலாந்து October 27, 2018 5:24 am GMT 0 Comments 1399 by : krishan

வடக்கு லண்டனில் கம்டன் பகுதியில் உள்ள மாடி வீடொன்றிற்குள் ஆயுதமேந்திய கொள்ளையர்கள் புகுந்ததை அடுத்து, வீட்டில் இருந்த நபர் ஒருவர் மூன்றாம் மாடியின் யன்னல் வழியாக வௌியே பாய்ந்து உயிரிழந்துள்ளார்.
49 வயதான ஷெய்கு அடம்ஸ் நேற்று வியாழக்கிழமை இரவு 23:56 அளவில் மாடிக் குடியிருப்பின் கீழ் தளத்திலிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
ஆயுதம் ஏந்திய இரண்டுபேர் அவரை பலவந்தப்படுத்தியதன் காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக யாரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் விசாரணைகள் தொடர்வதாக மெட்ரோபொலிட்டன் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
அடம்ஸின் மரணம் தொடர்பாக அவரது வாரிசுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மரண விசாரணைகள் பின்னர் இடம்பெறும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது ஒரு துரதிஸ்டவசமான மரணம் என்றும், கொள்ளையர்கள் பலவந்தப்படுத்தியதால் அவர் யன்னல் வழியாக பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என்று விசாரணையை முன்னெடுத்து வரும் பொலிஸ் தலைமை அதிகாரி நெயெல் மெக்ஹியூ கூறுகிறார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.