வீட்டு வாடகையைக்கூட செலுத்த முடியாத அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதி!
அமெரிக்க காங்கிரஸ் வரலாற்றில் முதல் இளம் பெண் காங்கிரஸ் பிரதிநிதி ஒருவர், தனது வாஷிங்டனில் உள்ள வீட்டுக்கு வாடகை தாங்கும் அளவுக்கு தனது பொருளாதாரம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
எனவே, முதல்மாத ஊதியத்திற்கு காத்திருக்கிறேன் என்று அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ என்ற குறித்த பெண் காங்கிரஸ் பிரதிநிதி கூறியுள்ளார்.
இந்த நிலையில், 29 வயதான குறித்த அரசியல்வாதி பொய் கூறுகிறார் என்றும் பல்லாயிரம் டொலர் மதிப்புடைய ஆடைகளை அணிந்து பத்திரிகைகளில் காட்சி அளித்துள்ளார் என்றும் ஃபொக்ஸ் நியூஸ் செய்தியாளர் ஹென்றி சாடியிருந்தார்.
அதற்கு ட்விட்டரில் பதிலளித்த அலெக்ஸாண்ட்ரியா, அந்த ஆடைகள் வௌிக்கள படப்பிடிப்புக்காக (ஃபோட்டோ சூட்டிற்காக) கடனாக தரப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.