வுஹான் நகரில் இருந்து அழைத்து செல்லப்பட்டனர் பிலிப்பைன்ஸ் பிரஜைகள்!

கொரோனா வைரஸினால் அதிகம் பாதிக்கப்பட்ட சீனாவின் வுஹான் நகரில் சிக்கியிருந்த பிலிப்பைன்ஸ் பிரஜைகள் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர்.
30 பிலிப்பைன்ஸ் பிரஜைகள் இவ்வாறு விசேட விமானமொன்றின் மூலம் தலைநகரான மணிலாவுக்குகொண்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
மணிலா வந்த 30 பேர் மற்றும் விமான ஊழியர்கள் 10 பேரையும் நிவ் க்ளார்க் பகுதிக்கு அனுப்பி 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளனர்.
அத்துடன் மேலும் 300 பிலிப்பைன்ஸ் பிரஜைகள் வுஹான் நகரில் உள்ளதாகவும் அவர்களை மீள அழைத்து வருவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நேற்று ஒரே நாளில் சீனாவில் 80 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 811 ஆக அதிகரித்துள்ளது.
சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வுகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது சீனா முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது.
அத்துடன், 25 இற்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவி உள்ளமையால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.