வெட்டுப் புள்ளிகள் அடிப்படையில் மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கை பிற்போடல்!

தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் வெட்டுப் புள்ளிகள் அடிப்படையில் பாடசாலைகளில் மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளது.
சுமார் ஒரு மாத காலத்திற்கு குறித்த நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
2020 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பாடசாலை ரீதியிலான வெட்டுப்புள்ளிகள் கடந்த ஜனவரி மாதம் 15ஆம் திகதி வௌியாகியிருந்தன.
எவ்வாறாயினும், குறித்த வெட்டுப்புள்ளிகள் வௌியிடப்பட்ட முறை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையிலேயே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.