வெனிசுவேலா எதிர்க்கட்சி தலைவரின் செயற்பாடு சிறந்த முடிவல்ல: பிரேசில்

வெனிசுவேலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவை ஆட்சியிலிருந்து நீக்குவதற்கான எதிர்க்கட்சி தலைவர் ஜுவான் குவைடோவின் செயற்பாடு சிறந்த முடிவல்ல என பிரேசில் தெரிவித்துள்ளது.
ஊடகங்களுக்கு நேற்று (வியாழக்கிழமை) கருத்து தெரிவித்த பிரேசில் துணை தலைவர் ஹமில்டன் மௌரோ இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், வெனிசுவேலாவில் நீடித்துவரும் நெருக்கடிகள் நாட்டில் உள்நாட்டு போரை தோற்றுவிக்கும் என அஞ்சுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
துணை ஜனாதிபதியின் இக்கருத்து பிரேசில் ஜனாதிபதியின் கருத்திற்கு மாறாக அமைந்துள்ளது. கடந்த புதன்கிழமை வெனிசுவேலா குறித்து கருத்து தெரிவித்த பிரேசில் ஜனாதிபதி, எதிர்க்கட்சி தலைவரின் ஆட்சி கவிழ்ப்பு எழுச்சிக்கான அழைப்பு தோல்வியடையவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.