வெனிசுவேலா வெளியுறவுத்துறை அமைச்சர் மீது அமெரிக்கா புதிய தடை

வெனிசுவேலா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோர்ஜ் அறீஸாவிற்கு எதிராக அமெரிக்கா தடைகளை அமுல்படுத்தியுள்ளது.
ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ அரசாங்கத்தில் ஊழல்களை அரங்கேற்றியதாகவும், அவரது சார்பாக தூதரக அதிகாரிகளை தொடர்புகொண்டதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
மதுரோ அரசாங்கத்திற்கு எதிரான அமெரிக்காவின் இந்த புதிய தடைகளுக்கு அமைய வெளியுறவுத்துறை அமைச்சரும், கரகஸ் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதவானும் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் பொருளாதார சீர்குலைக்கும் வகையிலும், ஜனநாயகத்தை பாதிக்கும் வகையில் மதுரோ செயற்பட்டு வருவதாக வொஷிங்டன் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது.
அதற்கமைய தன்னை இடைக்கால ஜனாதிபதியாக அறிவித்துக்கொண்ட எதிர்க்கட்சி தலைவர் ஜுவான் கெய்டோவிற்கு அமெரிக்கா தமது ஆதரவை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.