வெப்பமயமாதலால் கிறீன்லாந்தின் பனிப்பாறைகளில் ஏற்படும் விளைவு!
பனிப்படலங்களிலிருந்து பனிப்பாறைகள் உருவாகும் செயல்முறை ‘calving’ என்று அழைக்கப்படுகிறது, இது சமுத்திரங்கள் வெப்பமயமாதலால் ஏற்படும் விளைவாகும். அந்த வகையில் கிறீன்லாந்தின் பனிப்பாறைகள் பிரிந்துசெல்கின்றன.
ஏறத்தாழ மிகக் குறைந்த மன்ஹாட்டன் அளவு பிரதான பனிப்படலங்களிலிருந்து பனிப்பாறைகள் பிரிந்து செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இவ்வாறான காட்சியை நேரடியாக பார்த்த நியூயோர்க் பல்கலைக்கழக கடல்ஆய்வு நிபுணரான டேவிட் ஹொலான்ட், கிறீன்லாந்தின் பனிப்பாறைகள் தொடர்பாக 12 ஆண்டுகள் ஆய்வு செய்து வருகிறார்.
அதிகரித்துவரும் நகரங்கள், தீவுகள் மற்றும் உலகளாவிய தொழிற்சாலைகள், கடல்மட்ட நீர் அதிகரிப்பினால் பனிப்பாறைகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன. கடல் நீர்மட்டம் எந்தளவு உயரும் அல்லது எவ்வளவு விரைவாக உயர்வடையும் என்பதையும் வெப்பமயமாதல் சமுத்திரங்களில் துரவ பனிப்பாறைகளை எவ்வாறு உருகவைக்கின்றன என்பதையும் விஞ்ஞானிகள் தெளிவுபடுத்தவில்லை.
எனினும் அந்தாட்டிக்காவில் பேரழிவை ஏற்படுத்தும் அளவில் ‘calving’ இடம்பெறுவதாக விஞ்ஞானிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.