‘வெப்பமாகும் உலகம்’ – பாரிஸ் நகரை ஆக்கிரமித்த பேரணி
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தாக்கம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி பேரணியொன்றை நடத்தியுள்ளனர்.
பூகோள வெப்பமயமாதல் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை மட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த பேரணி கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.
அதிகளவான பெற்றோர் தமது பிள்ளைகளை இந்த பேரணியில் கலந்துகொள்ளச் செய்துள்ளனர். அவர்களின் எதிர்காலத்திற்கு இவ்வாறான விழிப்புணர்வு அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையில் பிள்ளைகளுக்கு ஊக்கமளித்துள்ளனர்.
இந்த பேரணியில் சுமார் 14,500 பேர் பங்கு கொண்டமை, அரசியல் கடந்த விழிப்புணர்வு பேரணியொன்றுக்கு இத்தனை பேர் இணைந்து ஒருமித்த குரல் எழுப்பியமை வரவேற்கத்தக்க முயற்சி என்று சூழல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
காலநிலை மாற்றங்களுக்கு காபன் உமிழ்வினால் ஏற்படும் பாதிப்பு, அசாதாரண காலநிலை, உயிர்பல்வகைமையில் ஏற்படும் வீழ்ச்சி மற்றும் அணுசக்தி பாவனை என்பன கொடூரமான காலநிலை மாற்றத்திற்கு வித்திடுகின்றன என்று பேரணியில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.