வெலாண்டே அணியை வீழ்த்தியது பார்சிலோனா!
In உதைப்பந்தாட்டம் December 16, 2020 5:30 am GMT 0 Comments 1623 by : Benitlas

லா லிகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெலாண்டே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
20 அணிகள் இடையிலான லா லிகா கால்பந்து போட்டி தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
இதில் பார்சிலோனாவில் நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் லயோனல் மெஸ்சி தலைமையிலான பார்சிலோனா கிளப் அணி, லெவாண்டே அணியை எதிர்கொண்டது.
பந்து அதிக நேரம் பார்சிலோனா அணியினரின் கட்டுப்பாட்டில் வலம் வந்தாலும் எதிரணியின் தடுப்பு அரணை தகர்த்து கோல் அடிக்க முடியாமல் தடுமாறினார்கள்.
இதனால் இந்த ஆட்டம் சமநிலையில் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 76-வது நிமிடத்தில் பார்சிலோனா அணி கோல் அடித்தது.
அந்த அணி வீரர் பிரெங்கி டி ஜோங் கடத்தி கொடுத்த பந்தை மெஸ்சி கோல் வளையத்துக்குள் திணித்தார். அதன் பிறகு இரு அணியினரும் கோல் அடிக்க எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.
முடிவில் பார்சிலோனா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெலாண்டே அணியை தோற்கடித்தது.
11-வது ஆட்டத்தில் ஆடிய பார்சிலோனா அணி 5 வெற்றி, 2 டிரா, 4 தோல்வியுடன் 17 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தில் உள்ளது. ரியல் சோசிடாட் அணி 26 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.