News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
  • சர்வதேச பொறிமுறையூடாக போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் – சம்பந்தன்
  • அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
  • அத்துமீறிய பௌத்த ஊடுறுவல்களைத் தடுக்க நடவடிக்கை – சுரேன் ராகவன்
  • தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
  1. முகப்பு
  2. இலங்கை
  3. வெளிநாடுகளின் தாளத்திற்கு ஆடும் பிரதமரையே நீக்கினேன் – ஜனாதிபதி அதிரடி!

வெளிநாடுகளின் தாளத்திற்கு ஆடும் பிரதமரையே நீக்கினேன் – ஜனாதிபதி அதிரடி!

In இலங்கை     November 5, 2018 12:50 pm GMT     0 Comments     1752     by : Benitlas

வெளிநாடுகளின் தாளத்திற்கு ஆடும் பிரதமரை நீக்கி, அரசியலமைப்பிற்கு அமைய புதியவரை நியமித்தேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மஹிந்த அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பிரதமர் நாற்காலியில் வெறுமனே இரு உருவங்களை மாற்றவில்லை. இந்த நாட்டிற்கு அவசியமான ஒன்றையே செய்தேன்.

வெளிநாடுகளின் தாளத்திற்கு ஆடும் பிரதமரை நீக்கி, அரசியலமைப்பிற்கு அமைய புதியவரை நியமித்தேன்.

இதன்மூலம் இலக்கு அற்று பயணித்த பிரதமரை நீக்கிவிட்டு, தூரநோக்கு இலக்குடன் பயணிக்கும் ஒருவரை பிரதமராக நியமித்துள்ளேன்.

நான் கரு ஜயசூரியவிடம் பல முறை பிரதமர் பதவியை ஏற்குமாறு கோரினேன். ஆனால் அவர் ஏற்கவில்லை. சஜித் பிரேமதாஸவிடமும் அதனையே கூறினேன். ஆனால் அவரும் அதனை ஏற்கவில்லை.

ரணிலுடன் தொடர்ந்து பயணிக்க முடியாததால், இருவரும் ஏற்க மறுத்த பிரதமர் பதவிக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை நியமித்தேன்.

இதனால் ரணிலுடன் போட்டியிடவேண்டிய நிலை வரும் என்று அறிவேன். அதனால் ரணிலை மிதித்துச் செல்லக்கூடிய ஒருவரை பிரதமராக நியமித்துள்ளேன்.

வெளிநாட்டு நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நாட்டை நடத்த முடியாது. ரணில் உள்நாட்டவர்களை மதிக்காது, வெளிநாட்டவர்களுக்கு அதிக மதிப்பளித்தார்.

நான் சட்டவல்லுநர்களுடன் ஆராய்ந்தே புதிய பிரதமரையும், புதிய அமைச்சரவையினையும் நியமித்தேன். இது தவறு என்றால் ரணில் உச்ச நீதிமன்றத்தினை நாடலாம்.

நாடாளுமன்றத்தை நான் பலப்படுத்தியுள்ளேன். நாடாளுமன்றில் எமக்கு தேவையான 113 பெறும்பான்மையை பெற்று விட்டேன்.

புதிய பிரதமருடன் இணைந்து, வடக்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முன்னின்று செயற்படுவேன். வடக்கு கிழக்கில் புதிய வீடுகளை அமைக்க கடந்த மூன்றரை வருடமாக போராடினேன்.

சுவாமிநாதன், ரவி கருணாநாயக்க, ரணில் விக்ரமசிங்க ஆகியோரினால் அமைச்சரவைப் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், அது இழுத்தடிக்கப்பட்டது.

எனவே ஐ.நா சபைக்கு இது குறித்து நான் தெளிவுபடுத்தியுள்ளேன். நான் ஐக்கிய நாடுகளுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவேன். ஐ.நா. எமக்கு வழங்கிய ஒத்துழைப்புக்களையும் மதிக்கிறேன்.

எனது கொலை முயற்சி குறித்து இந்தியாவுடன் பகைமையை ஏற்படுத்த ரணில் முயற்சித்தார். எனவே நான் இந்தியவுடனும், சர்வதேசத்துடனும் உறவைப் பலப்படுத்தி, அவர்களுடன் இணைந்து பயனிக்க விரும்புகிறேன்.

நான் எடுத்த தீர்மானத்தை யாருக்காகவும் எதற்காகவும் மாற்றிக்கொள்ள மாட்டேன்” என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!  

    இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்காக நியமிக்கப்பட்ட கு

  • வடக்கு இளைஞர்களை குறிவைக்கிறார் கோட்டா!  

    பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, வடக்கு, கிழக்கிலுள்ள  இளைஞர்கள் சிலரை கொழும

  • ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!  

    இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது

  • கட்சி தலைவர் கூட்டத்தில் மாகாண சபை தேர்தல் குறித்து தீர்மானம்!  

    மாகாண சபை தேர்தல் குறித்து நாளை (புதன்கிழமை) நடைபெறவுள்ள கட்சி தலைவர் கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள

  • மஹிந்த தலைமையில் புதிய ஜெனீவா தீர்மானமொன்றை கொண்டுவருவோம் – ஜி.எல்.பீரிஸ்  

    மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அமையவுள்ள அரசாங்கத்தில், தேசியம் மற்றும் இராணுவத்தினரின் சுயகௌரவத்தை பாதுகா


#Tags

  • mahinda rajapakse
  • Protest rally
  • STF
  • UNP
  • ஆர்ப்பாட்டப் பேரணி
  • ஐ.தே.க
  • பிரதமர் மஹிந்த ராஜபக்ச
  • மஹிந்த ராஜபக்ஷ
  • விசேட அதிரடிப் படை
    பிந்திய செய்திகள்
  • ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
    ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
  • அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
    அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
  • தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
    தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
  • அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து வாழவேண்டும்!
    அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து வாழவேண்டும்!
  • Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
    Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
  • LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
    LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
  • யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
    யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
  • ரியோ – கார்த்திக் இணையும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’
    ரியோ – கார்த்திக் இணையும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’
  • ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை
    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை
  • தமிழர்களின் மேலதிகப் பங்களிப்பு அவசியம் : முன்னாள் தளபதி
    தமிழர்களின் மேலதிகப் பங்களிப்பு அவசியம் : முன்னாள் தளபதி
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.