வெளிநாடுகளில் இருந்து மேலும் 762 பயணிகள் நாடு திரும்பினர்
In இலங்கை February 18, 2021 5:11 am GMT 0 Comments 1257 by : Dhackshala

வெளிநாடுகளில் இருந்து மேலும் 762 பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இன்று (வியாழக்கிழமை) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய 18 விமானங்களின் மூலமாக அவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
நாட்டை வந்தடைந்த அவர்கள் அனைவரும் இலங்கை இராணுவத்தினரால் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதேவேளை இக்காலக் கட்டத்தில் 18 விமானங்களின் மூலமாக கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து 647 பயணிகள் நாட்டைவிட்டு புறப்பட்டும் உள்ளனர்.
இதன்படி குறித்த காலப்பகுதியில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மொத்தம் 36 பயணிகள் விமான சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இவற்றின் மூலமாக மொத்தம் 1,409 பயணிகள் தமக்கான சேவைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.