வெளிநாடுகளில் இருந்து வரும் அழைப்புக்கள் குறித்து மக்களுக்கு அவசர எச்சரிக்கை!
In இலங்கை December 21, 2019 10:14 am GMT 0 Comments 3640 by : Dhackshala

கையடக்க தொலைபேசிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் அழைப்புக்கள் தொடர்பாக அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து வரும் ஒரு முறை மாத்திரம் ஒலி எழுப்பி துண்டிக்கப்படும் அழைப்புக்கள் தொடர்பாக அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம், பொது மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
விசேடமாக மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் இந்தியாவிலிருந்தும் அதிகமாக ஒரு முறை மாத்திரம் ஒலி எழுப்பி துண்டிக்கப்படும் அழைப்பின் பின்னர் அந்த இலக்கத்திற்கு மீண்டும் அழைப்புக்களை மேற்கொள்ள வேண்டாம் என இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம், கைத்தொலைபேசி பாவனையாளர்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.