வெளிநாட்டு நாணயத்தாள்களை கடத்த முயன்ற நபர் கைது

கேரளாவின் கொச்சி விமான நிலையத்தில் 10 கோடி ரூபா மதிப்புள்ள வெளிநாட்டு நாணயத்தாள்களை துபாய்க்கு கடத்த முயன்ற நபர் சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டுப் நாணயத்தாள்களை கடத்திச் செல்ல முயன்ற குறித்த நபர் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் என்றும்,இன்று (புதன்கிழமை) அதிகாலையில் துபாய்க்கு விமானத்தின் மூலம் அவர் செல்ல முற்பட்டவேளையில் அவரது பைகள் சோதனையிடப்பட்டுள்ளன.
அப்போது சவுதி அரேபியாவின் ரியால்களும் அமெரிக்க டொலர்களையும், பிரஸர் குக்கர் மற்றும் ஸ்டவ் பாத்திரங்களில் மறைத்து வைத்திருந்தமை சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட சோதனைகளின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவரிடமிருந்த 10 கோடி ரூபாய் சுங்கத் திணைக்களத்தினரால் பறிமுதல் செய்யப்பட்டதுடன் பணத்தை கடத்தி செல்ல முயன்ற ஆப்கானிஸ்தான் பிரஜை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.