வெளியாகிறது விஜய் சேதுபதியின் ‘மார்க்கோனி மத்தாய்’ திரைப்படம்
In சினிமா July 11, 2019 3:35 am GMT 0 Comments 1582 by : adminsrilanka

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மலையாள திரைப்படமான ‘மார்க்கோனி மத்தாய்’ திரைப்படம் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியாகவுள்ளது.
இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இத்திரைப்படத்திற்கு விஜய்சேதுபதி மலையாளம் தமிழ் என இரு மொழிகளிலும் வசனம் பேசி நடித்துள்ளார்.
ஜெயராம் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் நடிகர் விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிவகார்த்திகேயனுடன் மனம் கொத்தி பறவை படத்தில் நடித்த ஆத்மியா இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
சனில் கலத்தில் என்பவர் இந்த படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார்.
வங்கி ஒன்றின் காவலாளியாக வேலை பார்க்கும் ஜெயராமுக்கும் அதே வங்கியில் துப்புரவு பணிப்பெண்ணாக வேலை பார்க்கும் பெண்ணுக்கும் ஏற்படும் காதலும், நடிகர் விஜய்சேதுபதியால் அவர்கள் வாழ்க்கையில் என்ன மாற்றம் ஏற்படுகின்றது என்பதும்தான் இத்திரைப்படத்தின் கதையாகும்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.