வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மூன்று நாடுகளுக்குச் சுற்றுப்பயணம்!

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆறு நாட்கள் பயணமாக பஹ்ரைன், ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட நாடுகளுக்கு நாளை பயணமாகவுள்ளார்.
அமைச்சரான பின்னர், முதன்முறையாக பஹ்ரைன் செல்லும் அவர், இருதரப்புப் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு செல்லும் ஜெய்சங்கர், கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்தியத் தொழிலாளர்கள் மீண்டும் பணியாற்றுவதற்கான சூழ்நிலை குறித்து பேசவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக செஷல்ஸ் தீவுகளுக்குச் செல்லும் அவர், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தை நடத்துவார் என வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.