வெள்ளப்பெருக்கில் காணாமல் போன உரிமையாளருக்காக காத்திருக்கும் செல்லப்பிராணி

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி காணாமல் போன உரிமையாளரின் வருகைக்காக அவரது வளர்ப்பு நாய் கடந்த 3 நாள்களாக காத்திருக்கும் சம்பவம் பார்ப்பவர் மனதை நெருடச்செய்துள்ளது.
சமோலி மாவட்டத்தில் உள்ள ஜோஷிமடம் என்ற இடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் அருகில் இருந்த மின் நிலையங்களில் பணியாற்றி வந்தவர்களில் 200 இற்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருந்தனர்.
இந்நிலையில் தபோவன் அணைக்கட்டு பகுதியில் பணியாற்றி வந்த தனது உரிமையாளரின் வருகைக்காக பிளாக்கி எனும் 2 வயதான வளர்ப்பு நாய் ஒன்று தினமும் அந்த பகுதியை சுற்றி சுற்றி வந்த வண்ணம் உள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.