வெள்ளவத்தையில் ஒரே நாளில் அதிகளவான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்
In ஆசிரியர் தெரிவு December 18, 2020 7:07 am GMT 0 Comments 2253 by : Yuganthini
கொழும்பு- வெள்ளவத்தை பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் வெகுவாக அதிகரித்து வருகின்றது.
இதற்கமைய வெள்ளவத்தையில், நேற்று (வியாழக்கிழமை) மாத்திரம் புதிதாக 65பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பகுதியில் பி.சி.ஆர்.பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட 650 கொரோனா வைரஸ் தொற்றாளர்களில் அதிகளவானோர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்களாவர்.
இதன்படி கொழும்பில், 242 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதன்படி வெள்ளவத்தை பகுதியில் 65பேருக்கும் பொறளை பகுதியில் 54 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் தேசிய செயலணி தெரிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 35 ஆயிரத்தைக் கடந்த 35 ஆயிரத்து 387ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து நேற்று, 701 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை 26 ஆயிரத்து 353பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
இந்நிலையில், இன்னும் எட்டாயிரத்து 874 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
மேலும், நாட்டில் கொரோனா தொற்றினால் இதுவரை 160 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்காக நேற்றைய தினத்தில் மாத்திரம் 14 ஆயிரத்து 272 பி.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுக்கபட்டன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.