வெள்ள வாய்காலை மூடியமையினாலேயே வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது- மக்கள் குற்றச்சாடடு
In இலங்கை December 5, 2020 10:34 am GMT 0 Comments 1422 by : Yuganthini

யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட கந்தர்மடம், இலுப்பையடிச் சந்திப்பகுதியிலுள்ள வெள்ள வாய்காலை மூடி வீதி அமைக்கப்பட்டதனால், இன்று (சனிக்கிழமை) அதிகாலை தொடர்சியாகப் பெய்த கடும் மழை காரணமாக வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து, மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருக்கின்றனர்.
மேலும், வீடுகளின் பெரும் பகுதி வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறது. இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திய போதிலும், எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை யாழ்ப்பாணம் பேருந்து நிலையம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளும் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன.
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 17 ஆயிரத்து 243 குடும்பங்களை சேர்ந்த 57ஆயிரத்து 513 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.