வெஸ்ட் எண்ட் வின்னிபெக் பகுதியில் தீவிபத்து!

வெஸ்ட் எண்ட் வின்னிபெக் பகுதியில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து, பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எல்லிஸ் அவென்யூ அருகே மேரிலேண்ட் வீதியி கைவிடப்பட்ட, 4 மாடி, சிவப்பு செங்கல் கட்டடத்தில் நேற்று (புதன் கிழமை) இரவு 8 மணிக்கு முன்னதாக இந்த தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீவிபத்தை தொடர்ந்து, கட்டடத்திலிருந்த 50பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும், அருகிலுள்ள பல வீடுகளில் உள்ள பலர் வெளியேற்றப்பட்டதாகவும், தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.
மேலும், ஒரே கட்டடத்தில் ஏற்பட்ட இரண்டு தீ விபத்துகளினால், முன்னெச்சரிக்கையாக சுற்றியுள்ள கட்டடங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதன்பிறகு கடுமையான போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு படையினர் தீயினை கட்டுக்குள் கொண்டுவந்தனர். எனினும், இந்த தீ விபத்தினால் யாரும் காயமடையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீவிபத்து தொடர்பான சேதம் குறித்து இதுவரை எந்த விதமான தகவலும் வெளியிடப்பட்டாத நிலையில், இதுகுறித்து அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.