வேலூர் தேர்தலிலும் பலமடங்கு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்: ஸ்டாலின்
In இந்தியா July 23, 2019 11:18 am GMT 0 Comments 1460 by : Yuganthini

மக்களவைத் தேர்தலில் வெற்றிப்பெற்றதைப் போன்றே வேலூர் தேர்தலிலும் பலமடங்கு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோமென தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மு.க.ஸ்டாலின் மேலும் கூறியுள்ளதாவது, ”சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து வீனஸ் நகரில் அங்கன்வாடி மையம் 20 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் பெரியார் நகரில் 69 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 97 ஆயிரம் புத்தகங்கள் அடங்கியுள்ள நூலகத்தைத் திறந்து வைத்துள்ளேன்.
அதேபோன்று 74 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதுடன் ஏழை, எளிய மக்களுக்கு மீன்பாடி வண்டி, தையல் இயந்திரங்கள் ஆகியவற்றையும் வழங்கியுள்ளேன்.
இதேவேளை நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் வெற்றியடைந்ததைப் போன்று வேலூர் தேர்தலிலும் வெற்றி பெறுவோம். மக்களின் ஆதரவு எமது கட்சிக்கு எப்போது இருக்கின்றது” என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.