வேல்ஸில் வெள்ளிக்கிழமை முதல் மதுபானம் வழங்க தடை!
In இங்கிலாந்து December 1, 2020 8:15 am GMT 0 Comments 1950 by : Anojkiyan

வேல்ஸ் பப்கள், உணவகங்கள் மற்றும் அருந்தகங்கள் வெள்ளிக்கிழமை முதல் மதுபானம் வழங்க தடை விதிக்கப்படும். மேலும் 18:00 மணிக்கு பிறகு வாடிக்கையாளர்களுக்கு திறக்க முடியாது.
கொரோனா வைரஸ் தொற்றுகள் அதிகரிப்பதை சமாளிக்க புதிய விதிகளை முதலமைச்சர் மார்க் டிரேக்ஃபோர்ட் அறிவித்தார்.
இந்த நடவடிக்கை வேல்ஸின் விருந்தோம்பல் தொழிற்துறையை பேரழிவிற்கு உட்படுத்தும் என்று வணிக குழுக்கள் கூறியுள்ளது.
சினிமாக்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் காட்சியகங்கள் உள்ளிட்ட உட்புற பொழுதுபோக்கு மற்றும் பார்வையாளர் ஈர்ப்புகளும் மூடப்பட வேண்டும்.
வணிகங்கள் 18:00 மணிக்குப் பிறகு டேக்அவே சேவையை வழங்க முடியும். மேலும் அவர்களிடம் ஒஃப்-லைசென்ஸ் இருந்தால் 22:00 வரை டேக்அவே ஆல்கஹால் விற்கலாம்.
வேல்ஷ் அரசாங்கத்தின் தேசிய அணுகுமுறை குறைந்த கொவிட் வீதங்களைக் கொண்ட பகுதிகளில் நியாயமற்றது என்று செனட்டில் உள்ள கன்சர்வேடிவ் தலைவர் பால் டேவிஸ் கூறினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.