வேளாண் சட்டங்களால் நன்மையே விளையும் – ஜே.பி.நட்டா

விவசாயிகளுக்கு வேளாண் சட்டங்களால் நன்மையே விளையும் என பாஜக தலைவர் ஜே.பி.நட்டா உறுதியளித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் புருதுவான் பகுதியில் பிரம்மாண்டமான பா.ஜ.க பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பின்னர் விவசாயிகளுடன் அவர் கலந்துரையாடினார்.
தமது பிரசாரத்தில் மம்தா பானர்ஜியின் அரசைக் கடுமையாக அவர் விமர்சித்துள்ளார். முதலமைச்சர் மம்தாவின் கட்சி குற்றங்களை கட்டவிழ்த்து விட்டதாகவும் அவரது ஆட்சியில் ஊழல் மிகுந்து விட்டதாகவும் சாடியுள்ளார்.
சட்டமன்றத் தேர்தலில் பாஜக 200 இடங்களில் வெற்றி பெறுவது உறுதி எனவும் ஜே.பி.நட்டா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.