வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு – 866 கல்வியாளர்கள் மத்திய அரசுக்கு கடிதம்
In இந்தியா January 2, 2021 3:25 am GMT 0 Comments 1364 by : Jeyachandran Vithushan

டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் புதிய வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து கல்வியாளா்கள் 866 போ் மத்திய அரசாங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.
டெல்லி பல்கலைக்கழகம், பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம், ஜவஹா்லால் நேரு பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களை சேர்ந்த 866 கல்வியாளர்கள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அதில் விவசாயிகள் நினைப்பதுபோல் புதிய வேளாண் சட்டங்கள் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு எந்த பாதகத்தையும் ஏற்படுத்தாது என குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் அந்தச் சட்டங்கள் அனைத்து சட்டவிரோத சந்தைக் கட்டுப்பாடுகளில் இருந்து வேளாண் வா்த்தகத்தை விடுவித்து, மண்டிகளை தாண்டி சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்தோடு விவசாயிகள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர்கள் இந்த வாக்குறுதிகளை தாங்கள் திடமாக நம்புவதாகவும் அறிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.