வேளாண் திருத்த சட்டங்கள் : 22 விவசாயிகள் உயரிழந்துள்ளதாக தகவல்!
In இந்தியா December 16, 2020 2:40 am GMT 0 Comments 1441 by : Krushnamoorthy Dushanthini

வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளில் 22 பேர் கடும் குளிருக்கு உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் குறித்த போராட்டம் காரணமாக ரயில்வே துறைக்கு இரண்டாயிரம் கோடி ரூபாய் வரையில் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்புதெரிவித்து பஞ்சாப் உள்ளிட்ட வட மாநில விவசாயிகள் பல்வேறு கட்ட போரட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசு விவசாய பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இருப்பினும் வேளாண் சட்டத்தை திரும்ப பெறும் வரையில் போராட்டம் தொடரும் என விவசாயிகள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்
இந்நிலையில் வடக்கு மண்டல ரயில்வே அதிகாரி அசுதோஸ் கங்கால் கூறுகையில் விவசாயிகளின் தொடர் போராட்டத்தால் ரயிவேயின் வருவாய் சுமார் 2 ஆயிரம் முதல் 2,400 கோடி ரூபாய் வரையில் இழப்பு ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.