வோல்ட்டா ஏ எஸ்பானா சைக்கிளோட்டப் போட்டியில் வென்ற இத்தாலிய வீரர்!
In விளையாட்டு September 6, 2018 9:21 am GMT 0 Comments 1359 by : krishan
1934 ஆம் ஆண்டு தொடக்கம் மிக நீண்ட வரலாற்றைக் கொண்ட ஸ்பெயின் சைக்கிள் பந்தைய போட்டி இன்றளவில் மிக முக்கிய இடத்தைப் பெறுகின்றனது. முதலாவது போட்டி தேசிய அளவில் இடம்பெற்ற போது பிற்காலங்களில் ஸ்பெயினின் ஒரு முக்கிய நகரமான எய்பரில் உள்ள சைக்கிள் உற்பத்தியாளர்களால் அந்த போட்டிகள் ஊக்குவிக்கப்பட்டு சர்வதேச மட்டத்திற்கு உயர்ந்தது.
குடியரசுகளின் க்ரான்-பிரி என அழைக்கப்பட்ட குறித்த போட்டிகள் Eibar ல் ஆரம்பித்து தலைநகர் Madrid வழியாக மீண்டும் Eibar ஐ வந்தடையும்
வகையில் ஏற்பாடு செய்யப்பட்டன.
அந்த வகையில், ஸ்பெயினில் வருடாந்தம் பல நிலைகளில் இடம்பெறும் Vuelta España சைக்கிள் பந்தயம், சில நேரங்களில் அருகிலுள்ள நாடுகளிலும் தனது பயணத்தை தொடரும். இந்த ஆண்டுக்கான வோல்ட்டா ஏ எஸ்பானா (Vuelta a Espana) வீதி சைக்கிளோட்டப் போட்டியில் இத்தாலிய சைக்கிளோட்ட வீரர் அலேஸ்சான்ரோ டி மார்ச்சி (Alessandro de Marchi), 11 வது கட்டத்தை வென்று நேற்றைய தினம் (புதன்கிழமை) சாதனை படைத்தார்.
பலத்த மழை காலநிலையையும் பொருட் படுத்தாமல் சைக்கிளோட்ட போட்டியாளர்கள் தமது வேகமான பயணத்தை தொடர்ந்தனர். ஸ்பெயினின் – லுயின்ட்ராவைச் சேர்ந்த ரிபேரா சக்ரா மற்றும் ஜொனாதன் ரெஸ்ட்ரோவை ஆகியோரை தோற்கடித்து மார்ச்சி தனது வெற்றியை
உறுதி செய்தார். மொத்தமாக 208.8 கிலோமீற்றர் நீளத்தை கொண்ட சைக்கிளோட்டப் பந்தயம் மொம்பியுயே நகரத்தில் ஆரம்பித்தது.
பிரான்ஸ் சைக்கிளோட்ட வீரர் திபோட் பினோட் மற்றும் சுவிட்சர்லாந்தின் BMC சைக்கிளோட்ட அணியின் டைலான் டெயுன் ஆகியோர் தங்களின் சக போட்டியாளர்களை விட நீண்ட இடைவௌியை கடைபிடித்தனர். இறுதியில் பினட் வெற்றிக்கு கிட்டத்தட்ட இரண்டு நிமிடங்களின் பின்னர் எல்லையை அடைந்தார்.
ஆனால் பி.எம்.சி அணி போட்டியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது, இறுதி கட்டத்தில் டி மார்ச்சி, கடுஷா-அல்பெசினின் ரெஸ்ட்ரெபோவுடன் கடைசி சவாலை எதிர்கொண்டு வெற்றிபெற்றார்.
இதனிடையே, 12 வது கட்ட போட்டிகள் மொன்டோநேடாவில் சுமார் 177.5 கிலோமீற்றர் தொலைவிற்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.