UPDATE: கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவியை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு
In இலங்கை February 6, 2020 10:37 am GMT 0 Comments 3384 by : Dhackshala

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்றதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதற்கமைய அவர்களை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
UPDATE: விமானக் கொள்வனவு மோசடி – கபில சந்திரசேன நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்
ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்றதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்
குறித்த இருவரும் இன்று காலை அவர்களின் சட்டத்தரணிகள் ஊடாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியிருந்தனர்.
ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்றதிகாரி CIDயில் முன்னிலை
ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்றதிகாரி கபில சந்திரசேன இன்று (வியாழக்கிழமை) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். அவருடன் அவரின் மனைவி பிரியங்கா நியோமாலியும் அங்கு முன்னிலையாகியுள்ளார்.
இருவரிடமும் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தற்போது வாக்குமூலம் பதிவுசெய்து வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
வாக்குமூலத்தைப் பெற்றுக்கொண்டதன் பின்னர், அவர்களை கைது செய்யவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறியுள்ளார். இதனையடுத்து, இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிரியங்கா நியோமாலி ஆகியோரை கைது செய்யுமாறு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க கடந்த திங்கட்கிழமை பிடியாணை பிறப்பித்திருந்தார்.
ஶ்ரீலங்கன் விமான நிறுவத்தின் எயார்பஸ் ரக 10 விமானங்களைக் கொள்வனவு செய்ததில் 2 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் பெற்றமை தொடர்பாக சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்கதக்து.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.