ஷங்ரிலா குண்டுதாரிக்கு சொந்தமான தொழிற்சாலையின் கணக்காய்வாளர் கைது

கொழும்பு ஷங்ரிலா நட்சத்திர விடுதியில் தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரிக்கு சொந்தமான வெல்லம்பிட்டி செப்பு தொழிற்சாலையின் கணக்காய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் நேற்று (வியாழக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போதே குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
கண்டியில் சந்தேகத்திற்கிடமான முறையில் கைப்பற்றப்பட்ட கார் தாக்குதல் இடம்பெற்ற தினத்தில் அக்கரைப்பற்றுக்கு பயணித்துள்ளது.
காரை தொழிற்சாலையின் கணக்காய்வாளரே செலுத்தி சென்றுள்ளார். இந்நிலையில் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் வகையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் குறித்த தொழிற்சாலையின் முகாமையாளர் உட்பட 9 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த செப்பு தொழிற்சாலையிலேயே தாக்குதலுக்கான குண்டுகள் சில தயாரிக்கப்பட்டதாகவும் சந்தேகங்கள் எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.