ஸ்கொட்லாந்துக்கு ட்ரம்ப் விஜயம் செய்யும் சாத்தியம்!
In இங்கிலாந்து May 5, 2018 5:50 am GMT 0 Comments 1976 by : Suganthini

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிரித்தானியாவுக்கான தனது விஜயத்தின்போது, ஸ்கொட்லாந்துக்கு விஜயம் செய்யும் சாத்தியம் காணப்படுவதாகத் தெரியவருகின்றது.
எதிர்வரும் ஜுலை 13ஆம் திகதி பிரித்தானியாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விஜயம் செய்யும் நிலையில், பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே உட்பட உயர்மட்ட அதிகாரிகளையும், பிரித்தானியாவின் 2ஆம் எலிஸபெத் மகாராணியையும் சந்திக்கவுள்ளார்.
இதனையடுத்து, ஸ்கொட்லாந்துக்கு ட்ரம்ப் விஜயம் செய்யும் சாத்தியம் காணப்படுவதாகவும் தெரியவருகின்றது.
எனினும், இவரது பயணத்திட்ட விவரங்கள் இன்னும் வெளியாகவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.