ஸ்டாலினுக்கு கடவுள் வரம் கொடுக்க மாட்டார்- எடப்பாடி பழனிசாமி
In இந்தியா January 24, 2021 5:11 am GMT 0 Comments 1334 by : Yuganthini

தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் கையில் வேல் எடுத்தாலும் கடவுள் வரம் கொடுக்க மாட்டார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவையில் இரண்டாவது நாளாக பிரசாரம் மேற்கொண்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலினை இவ்வாறு கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
குறித்த பிரசார கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மேலும் கூறியுள்ளதாவது, “தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முருகன் வரம் கொடுக்க மாட்டார்.
கடவுளை இழிவாக பேசியவர்கள் கையிலே கடவுள் வேலை கொடுத்த காட்சியை பார்க்கிறோம். ஸ்டாலின் கையில் வேல் எடுத்தாலும் கடவுள் வரம் கொடுக்க மாட்டார். அ.தி.மு.க.வுக்குத் தான் வரம் கொடுக்கப் போகிறார்.
மு.க.ஸ்டாலின் உண்மையை சொல்லி வாக்கு கேட்டால், குறைந்தபட்சம் எதிர்க்கட்சி அந்தஸ்தாவது கிடைக்கும். ஏழை, எளிய மாணவர்கள் கல்வியில் உயர அடித்தளம் போட்டது அ.தி.மு.க அரசு. ஸ்டாலின் வெளியில் பேசுவது ஒன்று, உள்ளே இருப்பது வேறு ஒன்று.
இதேவேளை கோவையில் இராணுவ தளவாட உதிரி பாகங்கள் தயாரிப்பு ஆலை அமைக்க பிரதமரிடம் கோரிககை விடுத்துள்ளேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.