ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடுவேன் – சீமான் அறிவிப்பு
In இந்தியா December 31, 2020 3:30 am GMT 0 Comments 1439 by : Dhackshala

தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடுவேன் என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக சென்னையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், “ரஜினியின் முடிவை வரவேற்கிறேன். அவரது உடல்நலம் முதன்மையானது. அரசியல் ரீதியாக, அவர் மீது கடுமையான சொற்களை பேசி உள்ளேன். அது அவரையோ, அவரது குடும்பத்தினரையோ, ரசிகர்களையோ காயப்படுத்தி இருந்தால் வருந்துகிறேன். இனி எப்போதும் அவர் எங்கள் புகழ்ச்சிக்கு உரியவர்.
ஆசிய கண்டம் முழுதும் அவரது புகழ் வெளிச்சம் பரவி கிடக்கிறது. அவருக்கு அரசியல் அவசியம் இல்லை. அவர் இளம் வயதிலேயே அமைதியை தேடி சென்றவர். இப்போது அவருக்கு கூடுதல் அமைதி தேவை.
அரசியலில், உட்கட்சி பிரச்சினையை சமாளிக்கவே சிரமமாக இருக்கும். அனைவரும் திட்டுவர். என்னை போன்ற ஒரு காட்டானாலேயே சமாளிக்க முடியவில்லை. அவரால் இதை தாங்க முடியாது. அதனால்தான் அவரை அரசியலுக்கு வர வேண்டாம் என்றேன்.
தி.மு.க., தலைவர் ஸ்டாலின் எந்த தொகுதியில் போட்டியிடுகிறாரோ அங்கு அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன். தி.மு.க.,விற்கு மாற்று, நாம் தமிழர்தான். அ.தி.மு.க., அல்ல” என அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.