ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யவுள்ளது விசேட குழு!

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான ஆய்வுகளை மூன்று பேர் கொண்ட பிரத்தியேக குழு இன்றும், நாளையும் முன்னெடுக்கவுள்ளது.
இது தொடர்பான் உத்தியோக பூர்வ அறிவித்தலை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தூப் நந்தூரி இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ளார்.
இன்று மாலையில் ஆலையை சுற்றிப் பார்க்கவுள்ள குழுவினர், நாளை ஆலையின் செய்றபாடுகள் மற்றும் பாவனை பொருட்கள் தொடர்பில் ஆய்வை முன்னெடுக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
அத்துடன் நாளை காலை 11 மணியளவில் இடம்பெறவுள்ள மக்கள் சந்திப்பில், யார் வேண்டும் என்றாலும் ஸ்டெர்லைட் தொடர்பான ஆவணங்கள் அல்லது, தாம் பாதிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பிலான விடயங்கள் மற்றும் ஆதாரங்களை, ஓரளாக அல்லது எழுத்து மூலம் நேரில் சமர்ப்பிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த ஆய்வின் போது வேதாந்த நிறுவன இயக்குநர் உடனிருப்பாரா என்ற ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் வழங்கிய சந்தூப் நந்தூரி, அவர் உடனிருக்க கூடும், ஆனால் தேவையேற்படின் அவர் வெளியேற்றப்படுவார் என்றும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.