ஸ்டெர்லைட் நிறுவனம் உண்மைக்கு புறம்பான தகவல்களை முன்வைக்கிறது: வைகோ

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவித்து வருவதாக ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்ட கருத்து கேட்போர் கூட்டத்தில் பங்கேற்ற வைகோ, அதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே மேற்படி கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கூறியுள்ள அவர்,
“தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பின்னர் காற்று மாசு குறைந்துள்ளது என்ற புள்ளிவிபரங்களை சட்டத்தரணி வைத்தியநாதன் கூறியுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பின்னர் பெருமளவில் காற்றுமசடைதல் குறைவடைந்துள்ளது. இதனால் காற்று மண்டலத்தை மாசுபடுத்தியது ஸ்டெர்லைட் என்பதும் நிருபனமாகிவிட்டது” எனக் கூறியுள்ளார்.
ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்க எதிராக, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தரப்பால் வழக்கு தொடரப்பட்டது. அதன்படி நடத்தப்பட்ட கருத்து கேட்போர் கூட்டத்தில், அரசு சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.